Posts

Showing posts from November, 2023

ப்ரார்த்தனா பௌத்திக்

Image
சங்க ப்ரார்த்தனை - அறிமுகம் நமது சங்கத்தின் அடிப்படையான விஷயம் ஷாகா. அந்த ஷாகாவில் மிக முக்கியமான ஒரு விஷயம் என்னவென்றால் அது ஷாகாவின் இறுதியில் பாடப்படும் பிரார்த்தனை ஆகும். பிரார்த்தனையை கூட்டாக சேர்ந்து பாடுவதில்லை. ஒவ்வொரு வரியாக ஒருவர் பாடி மற்ற எல்லோரும் திரும்பப் பாடும்படியாகத்தான்  இருக்கும். அதற்கு காரணம் இருக்கிறது. பிரார்த்தனையை வெறும் எந்திர கதியில் சொல்லக்கூடாது. அதன் பொருள் புரியாமலும், சொல்லும் முறையறியாமலும் சொல்லுவதால் அதற்குரிய பலன் கிடைக்காமற் போகும். (சொல்லுக சொல்லின் பொருளுணர்ந்து செல்வர் சிவபுரத்து..) வார்த்தைகளை சேர்க்கக்கூடாத இடத்தில் சேர்த்தோ, பிரிக்கக்கூடாத இடத்தில் பிரித்தோ சொல்லுதல் கூடாது. அதேபோல அழுத்தம் கொடுக்கக்கூடிய இடத்தில் மட்டுமே அழுத்தம் கொடுத்து பாடவேண்டும். அதனால்தான் சங்கப் பிரார்த்தனையை ஒருவர் தெளிவாகப் பாடி மற்றவர்கள் அதனைப் பின்பற்றி பாடவேண்டும் என்ற முறை உண்டாயிற்று. இந்த பிரார்த்தனையை தினசரி மனம் ஒன்றி அர்த்தம் உணர்ந்து சொல்லும்போது நமக்குள் ஒரு மாற்றம் உண்டாகும். பிரார்த்தனை ஏற்படுத்தும் மாற்றம் சிலசமயம் வெளிப்படையாகத் தெரியாமல் இருக்கல...